Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தனித்து வாழும் தாயார் லோவின் மூன்று பிள்ளைகளும் மதம் மாற்றப்பட்டதை விரும்பவில்லை பெர்லிஸ் சமய இலாகாவின் விண்ணப்பம் நிராகரிப்பு
தற்போதைய செய்திகள்

தனித்து வாழும் தாயார் லோவின் மூன்று பிள்ளைகளும் மதம் மாற்றப்பட்டதை விரும்பவில்லை பெர்லிஸ் சமய இலாகாவின் விண்ணப்பம் நிராகரிப்பு

Share:

தனித்து வாழும் தாயாரான லோ சி ஹோங் நடத்தி வரும் சட்டப் போராட்டத்தில், ஒரு தலைப்பட்சமாக மதம் மாற்றப்பட்ட அவரின் 3 பிள்ளைகளும் தொடர்ந்து முஸ்லிம்களாக இருக்க விரும்பவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று அறிவித்தது.

இதன் தொடர்பில் தமது தந்தை முகமட் நாகேஸ்வரன் முனியாண்டியினால் ஒரு தலைபட்சமாக மதம் மாற்றப்பட்ட அந்த மூன்று பிள்ளைகளுக்கும் இஸ்லாமிய மார்க்க கல்வியை வழங்குவது மற்றும் அந்த பிள்ளைகளின் நலன் சார்ந்த அம்சங்களை கவனிப்பதற்கான பொறுப்பை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று பெர்லிஸ் மாநில சமய இலாகா செய்து கொண்ட விண்ணப்பத்தை உயர் நீதிமன்ற நீதிபதி அக்மால் அப்துல் அசிஸ் தள்ளுபடி செய்தார்..

தமது சேம்பர் அறையில் அந்த மூன்று பிள்ளைகளுடன் தாம் நடத்திய நேர்காணலில் அந்தப் பிள்ளைகளும் முஸ்லிம்களாக இருக்க விரும்பவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

அத்துடன் தங்கள் தாயார் லோ வுடன் சேர்ந்து இருக்கவே அவர்கள் விரும்புகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளதாக நீதிபதி அக்மால் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

தாங்கள் மூவரும் ஒருதலைபட்சமாக மதம் மாற்றப்பட்டப் பின்னர் கடந்த மூன்று வருங்களாக பெரும் மன வலியுடன் வாழ்ந்து வருவதாக மூன்று பிள்ளைகளும் தங்களின் மன உணர்ச்சியை கொட்டியுள்ளனர்.

போதைப்பொருள் நடவடிக்கையில் சிக்கிய தமது தந்தையுடன் இருப்பதை விட தாயாரிம் இருப்பதே பாதுகாப்பானதாகும் என்று அந்த மூவரும் கருதுகின்றனர். அத்துடன் தற்போது தமது தாயாருடன் இருக்கும் பட்சத்தில் பள்ளிகளின் புறப்பாட நடவடிக்கைகளில் சிறப்பாக கவனம் செலுத்த முடிகிறது என்று அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

சுருங்கச் சொன்னால், பெர்லிஸ் சமய இலாகா தொடுத்துள்ள இவ்வழக்கில் Loh வின் 15 வயதுடைய இரட்டையர் மகள்கள் மற்றும் 11 வயதுடைய மகன் ஆகியோரின் எதிர்கால நலனை விட மற்ற நலன்களே மேலோங்கியிருப்பதாக நீதிமன்றத்தின் பரிசீலனையில் தெரிய வந்துள்ளதாக நீதிபதி Akmal குறிப்பிட்டார்

எனவே அந்த மூன்று பிள்ளைகளின் எதிர்காலம் மறுக்கப்பட்டு விடக்கூடாது. அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினர் உணர வேண்டும் என்று நீதிபதி தமது தீர்ப்பில் கேட்டுக்கொண்டார்.

Related News