Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தஞ்சோங் மின்யாக்கில் பழைய பெட்டரி சேமிப்புக் கிடங்கில் தீ
தற்போதைய செய்திகள்

தஞ்சோங் மின்யாக்கில் பழைய பெட்டரி சேமிப்புக் கிடங்கில் தீ

Share:

மலாக்கா, செப்டம்பர்.06-

மலாக்கா, தஞ்சோன் தொழில்பேட்டை பகுதியில் பழைய பெட்டரிகளைச் சேமித்து வைக்கப்பட்ட கிடங்கு ஒன்று தீப்பற்றிக் கொண்டது.

இந்தத் தீச் சம்பவம் தொடர்பாக தங்கா பத்து தீயணைப்பு, மீட்புப் படையினர் நேற்று மதியம் 12.49 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றதாக அதன் செயலாக்கத் தலைவர் அஹ்மாட் யாட் தெரிவித்தார்.

ஐம்பதுக்கு ஐம்பது சதுரடி பரப்பளவைக் கொண்ட அந்த பெட்டரி சேமிப்புக் கிடங்கு, கிட்டத்தட்ட 60 விழுக்காடு அழிந்தது. இதற்கு முன்பு, அந்தக் கிடங்கு, சுற்றுச்சூழல் இலாகாவினால் மூடப்பட்டதாகும்.

தீ நாலா புறமும் சூழ்ந்த நிலையில் அனல் தெறிக்க பலத்த வெடி சத்தத்துடன் தீயைக் கட்டுப்படுத்த 26 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடினர்.

தீ பிற்பகல் 2.58 மணிக்கு முழுமையாகக் கட்டுப்படுத்திய போதிலும், செயலாக்க நிறைவுப் பணிகள் மாலை 6.51 மணிக்கு ஒரு முடிவுக்கு வந்ததாக அஹ்மாட் யாட் தெரிவித்தார்.

Related News