Jun 6, 2026
Thisaigal NewsYouTube
90 லட்சம் ரிங்கிட் செலவில் புதிய இடத்திற்கு மாறுகிறது லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளி
தற்போதைய செய்திகள்

90 லட்சம் ரிங்கிட் செலவில் புதிய இடத்திற்கு மாறுகிறது லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளி

Share:

சிரம்பான், மே.27-

நெகிரி செம்பிலான், பண்டார் ஸ்ரீ செண்டாயானில் உள்ள பழமையான ‘லாபு தோட்டம் பிரிவு 4’ தமிழ்ப்பள்ளியைப் புதிய இடத்திற்கு மாற்றுவதற்கு, பிரபல வீடமைப்பு மேம்பாட்டு நிறுவனமான Matrix Concepts Holdings Berhad நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது.

புதிய பள்ளி கட்டுமானத்திற்கான ஒட்டுமொத்தச் செலவான 90 லட்சம் ரிங்கிட்டில் பாதியை இந்நிறுவனம் ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு முன் கட்டப்பட்ட தற்போதைய பள்ளியில் 20 மாணவர்கள் மட்டுமே பயின்று வரும் வேளையில், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை மற்றும் கரையான் தொல்லையால் இந்த இடமாற்றம் அவசியமாகிறது.

இது குறித்து Matrix Concepts Holdings Berhad இணை தலைமை செயல்முறை அதிகாரி Tan Sze Chee கூறும்போது, "வெறும் உள்கட்டமைப்பை உருவாக்குவதுடன் எங்கள் பணி நின்று விடுவதில்லை, எதிர்கால சந்ததியினரை வடிவமைக்கும் மிக முக்கியத் தூணாக விளங்கும் கல்வி நிறுவனங்களையும், சமூகங்களையும் வலுப்படுத்துவதே எங்கள் நோக்கம்" எனத் தெரிவித்தார். புதிய பள்ளி தற்போதைய இடத்திலிருந்து 1 கி.மீ தொலைவில், 2.4 ஹெக்டர் நிலப்பரப்பில், 4 மாடி வகுப்பறைகள் மற்றும் நவீன வசதிகளுடன் அமையவுள்ளது.

ஒப்பந்தம் கையெழுத்திடும் இந்நிகழ்வில் மேட்ரிக்ஸ் கான்செப்ட்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி டான் ஸ்ரீ சீ, பள்ளி வாரியத் தலைவர் ஆர். நவஜீவன், நிறுவனத்தின் தோற்றுநரும் குழும நிர்வாகத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ லீ தியான் ஹொக், என்எஸ் கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ நோரஷார் மூசா மற்றும் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ பி. குணசேகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜே. அருள்குமார் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு