Dec 3, 2025
Thisaigal NewsYouTube
12 இந்திய பிரஜைகள் மீட்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

12 இந்திய பிரஜைகள் மீட்கப்பட்டனர்

Share:

சரவாக் மாநிலத்தில் மனித கடத்தல் கும்பல்களுக்கு எதிராக மலேசிய குடிநுழைவுத்துறை நடத்திய பல்வேறு சோதனைகளில் 12 இந்திய பிரஜைகள் மீட்கப்பட்டனர்.

கடந்த ஆகஸ்ட் 19 முதல் 22 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் கடத்தல் கும்பலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக நம்பப்படும் டட்லி என்று அடையாளம் கூறப்பட்ட 40 வயதுடைய உள்ளூர்வாசி மற்றும் 25க்கும் 40க்கும் இடைப்பட்ட வயதுடைய மேலும் 4 நபர்களும் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர் டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கும்பலினால் அந்த 12 இந்தியப் பிரஜைகளும் ஏமாற்றப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ரஸ்லின் குறிப்பிட்டார்.

12 இந்தியப் பிரஜைகளும் கோலாலம்பூரை வந்து சேர்வதற்கு முன்பு அவர்கள் ஒவ்வொருவரிடமும் தலா 20 ஆயிரம் வெள்ளி முதல் 25 ஆயிரம் வெள்ளி வரை சேவைக் கட்டணமாக சம்பந்தப்பட்ட கும்பல் பெற்றுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக ரஸ்லின் மேலும் விவரித்தார்.

Related News