Jun 29, 2026
Thisaigal NewsYouTube
மேற்காசியப் பதற்றம்: சிக்கித் தவிக்கும் மலேசியர்கள் பாதுகாப்பு - விஸ்மா புத்ரா உறுதி
தற்போதைய செய்திகள்

மேற்காசியப் பதற்றம்: சிக்கித் தவிக்கும் மலேசியர்கள் பாதுகாப்பு - விஸ்மா புத்ரா உறுதி

Share:

கோலாலம்பூர், மார்ச்.01-

மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம், வான்வெளி மூடல் காரணமாகப் பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் மலேசியப் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக விஸ்மா புத்ரா உறுதி அளித்துள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய சிற்றரசு, சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள மலேசியத் தூதரகங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான தூதரக உதவிகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

தற்போதைய சூழல் நிலையற்றதாக இருப்பதால், பயணிகள் தங்களின் பயண அட்டவணை குறித்துச் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், அந்தந்த நாடுகளில் உள்ள மலேசியர்கள் 'E-Konsular' தளத்தில் உடனடியாகப் பதிவு செய்து கொள்ளுமாறும் மலேசிய வெளியுறவு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல், அதிகாரப்பூர்வத் தகவல்களுக்கும் அவசர உதவிகளுக்கும் அமைச்சின் செயல்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு