Sep 27, 2026
Thisaigal NewsYouTube
குவா மூசாங்கில் நீரில் மூழ்கிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டுபிடிப்பு
தற்போதைய செய்திகள்

குவா மூசாங்கில் நீரில் மூழ்கிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டுபிடிப்பு

Share:

குவா மூசாங், கம்பங் புலாய் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் யுபி சிக் சூன் ஃபூ தெரிவித்துள்ளார்.

அந்த சடலமானது நீரில் மூழ்கிய நிலையில், கற்கள் மற்றும் மரக்கட்டைகளுக்கு இடையில் சிக்கியிருந்ததாகவும் யுபி சிக் சூன் ஃபூ குறிப்பிட்டுள்ளார்.

அந்த நபர் 40 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கலாம் என்றும், அவர் எந்த நாட்டவர் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மரணத்திற்கான துல்லியமான காரணத்தை கண்டறிய அச்சடலமானது குவா மூசாங் மருத்துவமனைக்கு சவப்பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

Related News