கூச்சிங், டிசம்பர்.06-
சரவாக் மாநில அரசாங்கத்திற்குச் சொந்தமான ஏர் போர்னியோ விமானச் சேவை அடுத்த ஆண்டு ஜுலை மாதம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவிருக்கிறது.
வட்டார இணைப்பை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டு ஜூலை 2026-ல் ஜெட் விமானச் சேவைகளைத் தொடங்க ஏர் போர்னியோ திட்டமிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் மற்றும் தென் கொரியாவின் ஜெஜு தீவு போன்ற இடங்களுக்கு நேரடி சர்வதேச விமானங்களை இயக்கவும் அது திட்டம் கொண்டுள்ளது என்று சரவாக் முதல்வர் டான் அபாங் ஜொஹாரி துன் ஓபேங் தெரிவித்துள்ளார்.








