Oct 17, 2026
Thisaigal NewsYouTube

பெண் மருத்துவ உதவியாளர் மீது பாலியல் தாக்குதல்: விசாரணை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெண் மருத்துவ உதவியாளர் மீது பாலியல் தாக்குதல்: விசாரணை

கோத்தாகினபாலு, நவ.6-


சபா, குயின் எலிசபெத் 1 மருத்துவமனையில் பெண் மருத்துவ உதவியாளருக்கு எதிராக பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் புகார் தொடர்பில் சுகாதார அமைச்சு விரிவான விசாரணையை மேற்கொள்ளும் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்த சுல்கிப்ளி அகமட் உறுதி அளித்துள்ளார்.

இந்த விசாரணை பாரபட்சமின்றி மேற்கொள்ளப்படும், எந்தவொரு பாகுபாடும் காட்டப்படாது என்று அமைச்சுர் உத்தரவாதம் அளித்துள்ளார்.

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துலினால் தொடக்கி வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத்திட்டம் மீதான நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

சபா, Queen Elizabeth மருத்துவமனையில் பணியாற்றி வரும் 32 வயதுடைய அந்த பெண் மருத்துவ உதவியாளருக்கு எதிராக நடத்தப்பட்டதாக கூறப்படும் பாலியல் தாக்குதல் தொடர்பில் அந்த பெண் பணியாளர், சுகாதார அமைச்சிலும், போலீஸ் துறையிலும் புகார் செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →