Oct 18, 2026
Thisaigal NewsYouTube

விஜயலெட்சுமியின் குடுபத்திற்கு நிதி வழங்கப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விஜயலெட்சுமியின் குடுபத்திற்கு நிதி வழங்கப்பட்டது

கோலாலம்பூர், செப்டம்பர் 06-

கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடைப்பாடை இடிந்து விழுந்து, ஆளை விழுங்கிய பாதாள சாக்கடைக்குழிக்குள் விழுந்து காணாமல் போன இந்தியப் பிரஜை விஜயலெட்சுமியின் குடும்பத்தினர் நாடு திரும்புவதற்கு முன்னதாக பல்வேறு தரப்பினர் வழங்கிய நிதியை பெற்றுள்ளனர்.

கோலாலம்பூர் மாநகர் மன்றம் உட்பட பல்வேறு நிறுவனத்துறையினரும் ஏற்புடைய நிதியை அந்த குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளனர் என்று கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் தாம் தெரிவித்ததாக கூட்டரசுப் பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.

எனினும் விஜயலெட்சுமி குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கப்படுவது குறித்து அமைச்சவையில் விவாதிக்கப்படும் என்று அமைச்சர் டாக்டர் ஜாலிஹா இதற்கு முன்பு அறிவித்து இருந்தது தொடர்பில் கருத்து கேட்ட போது, அந்த இழப்பீடுத் தொகை குறித்து விவரிக்க மறுத்து விட்டார்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →