Jul 10, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் வாழ்க்கைச் செலவினச் சுமையைக் குறைக்க பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் யோ பீ யின் நிதியுதவி
தற்போதைய செய்திகள்

மக்களின் வாழ்க்கைச் செலவினச் சுமையைக் குறைக்க பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் யோ பீ யின் நிதியுதவி

Share:

பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் யோ பீ யின், இன்று பூச்சோங் 14ஆவது மைலில் உள்ள பி40 பிரிவைச் சேர்ந்த 165 இந்தியக் குடும்பங்களுக்கு தலா 100 ரிங்கிட் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கான வவுச்சர்களை வழங்கினார். கடந்த பொங்கல் திருநாளின் போது, பி40 பிரிவைச் சேர்ந்த 500 குடும்பங்களுக்கு தலா 100 ரிங்கிட் வவுச்சர்களை வழங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது.

எனினும் அப்போது, 345 குடும்பங்களுக்குதான் 100 ரிங்கிட் வவுச்சர் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று பூச்சோங் 14 ஆவது மையில் உள்ள 165 குடும்பங்களுக்கு 100 ரிங்கிட்டிற்கான வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளதாக யோ பீ யின் தெரிவித்தார்.

இந்த 100 ரிங்கிட் உதவி என்பது பெரிய தொகை அல்ல என்ற போதிலும் மக்களின் வாழ்க்கைச் செலவின உயர்வின் சுமையை ஓரளவு குறைக்கும் நோக்கில் இந்த உதவி வழங்கப்பட்டது என்று யோ பீ யின் குறிப்பிட்டார்.

இத்துடன், பூச்சோங் தமிழ்ப்பள்ளிக்கு பள்ளித் தேவைகளுக்காக 14 ஆயிரத்து 500 ரிங்கிட் சிறப்பு நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் யோ பீ யின் விளக்கினார்.

2026ஆம் ஆண்டிற்கு இப்பகுதிக்கு மொத்தம் 5 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. . இந்த நிதி, இந்திய சமூகத்தின் நலனுக்காக ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள், பொங்கல் மற்றும் தீபாவளி கொண்டாட்டங்கள், திறன் மேம்பாட்டுப் பயிலரங்குகள் மற்றும் சிலம்பக் கலை வளர்ச்சி ஆகியவற்றிற்குப் பிரித்து வழங்கப்படும் என்றும் யோ பீ யின் குறிப்பிட்டார்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்