பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்கொள்ளவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமானா கட்சியின் தலைவர் முகமட் சாபு, அப்பதவியலிருந்து மாற்றப்பட வேண்டும் என்று இரண்டு அரசியல் ஆய்வாளர்கள், அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர்.
ஆசியான் நாடுகளிலேயே அரிசி மிக குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய நாடு என்று புகழப்பட்ட மலேசியாவில் அரிசி விலை, திடீர் ஏற்றம் கண்டு இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று சபா மலேசிய பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் லீ குவாக் தியுங் தெரிவித்தார்.
விவசாயம் மற்றும் உணவக பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற முறையில் தமது கடமையை சரிவர செய்யாத காரணத்தினால் அரிசி விலை கிட்டத்தட்ட 25 முதல் 35 விழுக்காடு வரை ஏற்றம் கண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத் தொடர்புடைய ஆக்க சிந்தனை நிறைந்த ஒருவரை அப்பதவிக்கு நியமிக்கப்பட்டால் மட்டுமே அரிசி திடீர் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியும் என்று லீ குவாக் தியுங் பரிந்துரை செய்துள்ளார்.








