Oct 15, 2026
Thisaigal NewsYouTube

ஏழு வயது சிறுமி சித்ரவதை: தம்பதியர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:

காஜாங், ஜன.30-

தங்களின் ஏழு வயது மகளை அடித்து சித்ரவதை செய்து வந்ததாக நம்பப்படும் காஜாங்கைச் சேர்ந்த ஒரு தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் நேற்று அதிகாலை 1.11 மணியளவில் காஜாங் மருத்துவமனையிலிருந்து கிடைக்கப்பெற்ற போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த தம்பதியர் கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.

சுயநினைவு இழந்த நிலையில் கிடந்த அந்த சிறுமியை அதன் பெற்றோர்கள், காஜாங் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்ற போது, அந்த சிறுமி, சித்ரவதை செய்யப்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அந்த சிறுமி நீண்ட காலமாகவே சித்ரவதை செய்யப்பட்டு வந்துள்ளார் என்பதற்கு உடலில் பல இடங்களில் காயமும், வீக்கமும், ரத்தக்கட்டும் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

புலன் விசாரணைக்கு ஏதுவாக 38 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க அந்த தம்பதியர் கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி நாஸ்ரோன் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்