Jun 29, 2026
Thisaigal NewsYouTube
எல்லை பாதுகாப்பு ஏஜென்சிக்கு 2 கோடியே 20 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அன்வார் ஒப்புதல்
தற்போதைய செய்திகள்

எல்லை பாதுகாப்பு ஏஜென்சிக்கு 2 கோடியே 20 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அன்வார் ஒப்புதல்

Share:

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிக்குத் துப்பாக்கிகள் மற்றும் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதற்காக 2 கோடியே 20 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டிற்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது பேசிய

டத்தோஸ்ரீ சைஃபுதீன், கடந்த பிப்ரவரி மாதம் கெடா, புக்கிட் காயு ஈத்தாமில் எல்லை பாதுகாப்பு ஏஜென்சி தளபதியின் வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, எல்லையில் பணியாற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்நிதி ஒதுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

20-க்கும் மேற்பட்ட ஏஜென்சிகளை ஒருங்கிணைத்து இந்த எல்லை பாதுகாப்பு ஏஜென்சி உருவாக்கப்பட்டுள்ளதால் எல்லையில் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறைக்கப்படும் என்றும், முதல் ஆண்டிலேயே இந்த ஏஜென்சி பல கோடி ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலை முறியடித்துள்ளதாகவும் அமைச்சர் சைஃபுதீன் பெருமிதம் தெரிவித்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு