Apr 16, 2026
Thisaigal NewsYouTube
பிரிக்பீல்ட்ஸில் நிகழ்ந்த துணிகரம், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு 97 லட்சம் ரிங்கிட்
தற்போதைய செய்திகள்

பிரிக்பீல்ட்ஸில் நிகழ்ந்த துணிகரம், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு 97 லட்சம் ரிங்கிட்

Share:

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் துன் சம்பந்தனில் உள்ள KVT தங்க மாளிகையில் இன்று காலையில் நிகழ்ந்த துப்பாக்கியேந்திய கொள்ளைச் சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த ம திப்பு, 97 லட்சம் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவத்தில் நான்கு கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளனர். அடையாளம் தெரியாத அந்த நால்வருக்கும் போலீசார் தற்போது வலை வீசியுள்ளனர் என்று கோலாலம்பூர் மாநகர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாரில் மார்சூஸ் தெரிவித்தார்.

"இன்று காலை 11 மணியளவில் நிகழ்ந்த இந்த கொள்ளைச் சம்பவத்தில் இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் கடைக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நான்கு பேர், ஊழியர்களை மிரட்டி 15 கிலோ எடையுள்ள 21 தட்டுகள் தங்க நகைகளை அள்ளிச் சென்றுள்ளனர். கொள்ளையர்கள் நகைகளுடன் சேர்த்து, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியின் ஒரு ஷாட்கன் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களையும் பறித்துச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களையும் பிடிக்க போலீஸ் துறையினர் தீவிர வலைவீசித் தேடி வருகின்றனர். அவர்களின் அடையாளங்களைக் கண்டறிய சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இந்தத் துணிகரக் கொள்ளை குறித்து குற்றவியல் சட்டத்தின் 395, 397 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாக டத்தோ ஃபாரில் மார்சூஸ் தெரிவித்தார்.

Related News