Apr 8, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவின் 10 மகிழ்ச்சியான நகரங்கள்
தற்போதைய செய்திகள்

மலேசியாவின் 10 மகிழ்ச்சியான நகரங்கள்

Share:

மலேசியாவின் 10 மகிழ்ச்சியான நகரங்களுக்கான பட்டியலை வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது. மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் கிளந்தானின் டாபோங், ஜோகூரின் குளுவாங், மெர்சிங் மற்றும் சிம்பாங் ரெங்கம் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் திரெங்கானு மாநிலத்தைச் சேர்ந்த கோலா திரெங்கானு, மாராங் மற்றும் பெர்மைசூரி ஆகிய நகரங்களும், பகாங்கின் பண்டார் லிப்பிஸ், ரவுப் மற்றும் சபாவின் ரானாவ் ஆகிய நகரங்களும் இப்பட்டியலில் அங்கீகாரம் பெற்றுள்ளன.

வளர்ச்சி என்பது பெரிய நகரங்களில் மட்டும் தங்கியிருக்காமல், சிறிய மற்றும் நடுத்தர நகரங்களிலும் சமமாக இருப்பதை இந்தத் தேர்வு உறுதிப்படுத்துவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News