கோலாலம்பூர், செப்டம்பர்.24-
வரும் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கும் பூடி மடானி ரோன்95 திட்டத்தின் வாயிலாக உதவித் தொகைக்குரிய பெட்ரோல் ரோன் 95 எரிபொருளைப் பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கு மேற்போகாமல் காலாவதியான வாகனமோட்டும் லைசென்ஸ் வைத்திருப்பவர்களும் தகுதி பெறுகின்றனர் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
வாகனமோட்டும் லைசென்ஸ் காலாவதியாகி, 3 ஆண்டுகளுக்கு மேற்போகாமல் இருக்குமானால் அந்த லைசென்ஸ் இன்னமும் செயலில் உள்ளன என்றே பொருள் கொள்ளப்படும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார். வாகனமோட்டும் லைசென்ஸ் காலாவதியாகி 3 ஆண்டுகளுக்கு மேற்போகாமல் இருக்கும் பட்சத்தில் அது புதுபிக்கக்கூடிய தகுதியில் இன்னமும் உள்ளது என்றே கருதப்படும் என்று அந்தோணி லோக் மேலும் விவரித்தார்.
அதே வேளையில் ஒருவரின் வாகனமோட்டும் லைசென்ஸ் காலாவதியாகி 3 ஆண்டுகளுக்கு மேலாகுமானால், அவர் பெட்ரோல் ரோன்95 எரிபொருளை லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசுக்கு வாங்குவதற்கான தகுதியை இழக்கிறார் என்பதையும் அமைச்சர் அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.








