May 22, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த ஆண்டு ஜனவரியில் பூர்த்தியாகும்
தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டு ஜனவரியில் பூர்த்தியாகும்

Share:

சிப்பாங், கே.எல்.ஐ.ஏ அனைத்துலக விமான நிலையத்தில் பிரதான கட்டடத்திலிருந்து விமான முனையத்திற்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் Aerotrain- ரயில்களை மாற்றியமைக்கும் திட்டம், அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் நிறைவுப் பெறும்.

புதிய ரயில்களை பொருத்தும் இந்த முதன்மைத் திட்டம், அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி முடிவடையும் என்று தொடக்கத்தில் அட்டவணையிடப்பட்டு இருந்தது.

எனினும் எதிர்பார்த்த காலக்கட்டத்தை விட இரண்டு மாதத்திற்கு முன்னதாகவே Aerotrain- திட்டம் முடிவுறும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அந்த அனைத்துலக விமான நிலையத்தை நிர்வகித்து வரும் Malaysia Airports Holding Berhad அறிவித்துள்ளது.

Malaysia Airports Holding Berhad- டின் துணை நிறுவனமான MA Sepang இத்திட்டத்தை Alstom Transport Systems நிறுவனத்துடன் இணைந்து, கூட்டாக மேற்கொண்டு வருவதாக MAHB அறிவித்துள்ளது.

Related News