பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவித்த நான்கு பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்று பேர் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் மக்களவையில் இருக்கைகளை மாற்றி அமர்ந்துள்ளனர்.
குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது அசிசி அபு நைம், ஜெலி நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாரி கெச்சிக் இலாபுவான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சுஹைலி அப்துல் ரஹ்மான் ஆகிய மூவரும் பிரதமர் அன்வாருக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தங்களின் இருக்கைகளை மாற்றிக் கொள்ளவும் விண்ணப்பித்து இருந்தனர்.
அவர்கள் எதிர்க்கட்சியின் பக்கம் அமர்வதுதான் முறை. ஆனால், மற்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோடு இல்லாமல் தனியே அமர்வார்கள் என டத்தோஸ்ரீ அகமது மஸ்லான் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.








