Oct 16, 2026
Thisaigal NewsYouTube

அந்நிய நாட்டவர்களின் கூடாரம் முடக்கப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அந்நிய நாட்டவர்களின் கூடாரம் முடக்கப்பட்டது

கோலாலம்பூர், நவ. 27-


அந்நிய நாட்டவர்களின் கூடாரம் என்று வர்ணிக்கப்பட்ட சிலாங்கூர், அம்பாங் ஜெயாவில் உள்ள பண்டான் மேவா அடுக்குமாடி வீடமைப்பகுதியில் குடிநுழைவுத்துறையினர் நேற்று மாலையில் மிகப்பெரிய சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நடவடிக்கையில் அந்த குடியிருப்புப்பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 119 பேர் கைது செய்யப்பட்டனர்.

பண்டான் மேவா அடுக்குமாடி வீடமைப்பகுதியில் 6 கட்டடத் தொகுதிகள் அந்நிய நாட்டவர்களின் கூடாரமாக மாறி வருவதாக அண்மையில் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக சிலாங்கூர் மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் கைய்ருல் அமினுஸ் கமாருடின் தெரிவித்தார்.

இந்த சோதனை நடவடிக்கையில் கிட்டத்தட்ட 400 பேரிடம் பயண ஆவணங்கள சோதிக்கப்பட்டன. இதில் மியன்மார், வங்காளதேசம், நேபாள், இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 119 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →