Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அடையாளம் தெரியாத சடலம் மீட்பு
தற்போதைய செய்திகள்

அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

Share:

தோட்டத் தொழிலாளி ஒருவரால் கண்டுப்பிடிக்கப்பட்ட ஓர் ஆடவரின் சடலம், சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிகிழமை, காலை 10 மணியளவில், மூவார், லெங்கா, பெல்டா மொக்கில் - புக்கிட் கெபோங் சாலையின் அருகில் உள்ள ஒரு குப்பைக் கிடங்கில், அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி ராயிஸ் முக்லீஸ் அஸ்மான் அஸிஸ் தெரிவித்தார்.

அந்தச் சடலம் பிரேத பரிசோதனைக்காக சுல்தானா ஃபத்தீமா மருத்துவமனைக்கு அனுப்பட்ட நிலையில், இதுவரை இறந்தவரின் அடையாளம் கண்டறியப்படவில்லை என்று எசிபி ராயிஸ் முக்லீஸ் குறிப்பிட்டார்.

Related News