நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் மத்தியில், வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்துவருவதனால், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சம்பந்தப்பட்ட வெளிப்புற நடவடிக்கைகளை முன்கூட்டியே ஒத்திவைக்குமாறு, கல்வி அமைச்சின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
அணிவகுப்புகள், போட்டி விளையாட்டுகள், முகாம்கள் மற்றும் வகுப்பறைக்கு வெளியே நடத்தப்படும் கற்றல் கற்பித்தல் போன்ற வெளிப்புற நடவடிக்கைகளைத் தற்காலிமாக குறைத்துக்கொள்ளும்படி ஃபட்லினா சிடெக் அறிவுறுத்தியுள்ளார்.
அதே வேளையில், வெப்ப நிலை சூழலிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்குப் பள்ளிகளில் நேர்த்தியான விளையாட்டு ஆடைகளை அணிவதற்குக் கல்வி அமைச்சு சிறுப்பு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு


