புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையம் பிசிசி யில் மக்கள் நீதிக் கட்சியாப பிகேஆர் - இன் தேசிய நிலையிலான மாநாடு இவ்வாரம் சனிக்கிழமை தொடங்கி 2 நாட்களுக்கு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்,
இந்த மாநாட்டிற்கு 2,374 பேராளர்களும் 1,500 பார்வையாளர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறதாக அவர் சொன்னார்.
இந்த மாநாட்டில், வாழ்க்கைச் செலவினம், இனம், சமயம், மன்னர் எனப்படும் 3ஆர் கொள்கை, பொருளாதார முன்னேற்றம், சமூக நலன், சமூக நீதி, அரசியல் நிலைத்தன்மை. ஊழல், அதிகார முறைகேடல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விவாதிக்கப்படும் என்றார் அவர்.







