Jul 1, 2026
Thisaigal NewsYouTube
128 மில்லியன்  ரிங்கிட்  சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்: தொழிலதிபர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

128 மில்லியன் ரிங்கிட் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்: தொழிலதிபர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Share:

சுமார் 128.34 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பணத்தைப் பெற்றதாக 58 வயது தொழிலதிபர் ஒரு ஷா ஆலாம், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

பி. ஷைலன் என்ற அந்த தொழில் அதிபர் மீது ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. கடந்த 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ஒரு நிறுவனத்தின் வங்கி கணக்கிலிருந்து தமது சொந்த நிறுவனத்திற்கு இந்தப் பணத்தைப் பரிமாற்றம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனினும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தொழில் அதிபர் ஷைலன், மறுத்து விசாரணை கோரியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரை ஒரு லட்சம் ரிங்கிட் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

வழக்கு விசாரணை முடியும் வரை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அந்த தொழில் அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும் SPRM சட்டத்தின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை