Jan 21, 2026
Thisaigal NewsYouTube
சபா மாநில மக்களுக்கு தொடர்பு மற்றும் இலக்கவியல் சேவைகளின் தரம் மேம்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

சபா மாநில மக்களுக்கு தொடர்பு மற்றும் இலக்கவியல் சேவைகளின் தரம் மேம்படுத்தப்படும்

Share:

தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு, நாட்டில் 186 புதிய இலக்கவியல் பொருளாதார மையங்களான பீடீ யை நிறுவ இலக்கு கொண்டுள்ளது. அவை இந்த ஆண்டு இறுதியில் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு தற்போதுள்ள 118 பீடீ க்கு கூடுதலாக மொத்தம் 13 புதிய பீடீ சபாவில் அமைக்கப்படும். அந்த வசதியை உருவாக்குவதற்கு பொருத்தமான இடங்களை கண்டறியும் பணியில் அமைச்சு ஈடுபட்டுள்ளது" என்று துணையமைச்சர் தியோ நீ சிங் செய்தியாளர்களிடம் கூறினார்.
பீடீ திட்ட செயலாக்கம் முடிந்ததும் அரசாங்கம், தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் வியாபாரிகளின் பொருளாதாரத்திற்கு உதவும் முயற்சிகளை இரட்டிப்பாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
பீடீ மூலம் பல சிறு தொழில் முனைவோர் தங்கள் தரமான தயாரிப்புகளை நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சந்தைப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, சபாவில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய இலக்கவியல் தொடர்பு திட்டம் முதல் கட்டப் பகுதியில் 398 தொடர்பு கோபுரங்களை நிர்மாணிக்கும் பணிகள் அடுத்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக துணை அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.
இத்திட்டத்தை நேரடியாகப் பார்க்கவே சபாவுக்கு தாம் வந்ததாகவும் இது தொடர்பாக சபா மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜி நூர் அவர்களை சந்தித்து பேசியதாகவும் தியோ நீ சிங் குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு