Oct 9, 2026
Thisaigal NewsYouTube

சக நண்பரால் ஆடவர் கொலை செய்யப்பட்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சக நண்பரால் ஆடவர் கொலை செய்யப்பட்டார்

கோலாலம்பூர், ஜூன்.30-

கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் ஒரு பழைய இரும்புக் கடையில் இரு சகப் பணியாளர்களுக்கு இடையில் நிகழ்ந்த கைகலப்பில் ஒருவர் கொல்லப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் போலீசார் ஓர் அவசர அழைப்பைப் பெற்றதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் சுகார்னோ முகமட் ஸஹாரி தெரிவித்தார்.

இரவில் மியன்மார் பிரஜை ஒருவருடன் மதுபானம் அருந்திக் கொண்டு இருந்த போது ஏற்பட்ட வாய் தகராற்றில் உள்ளுர் பிரஜையான 37 வயது வயது நபர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார் என்று அஹ்மாட் சுகார்னோ தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தப்பி, தலைமறைவாகி விட்ட மியன்மார் பிரஜை ஒருவரை போலீசார் தேடி வருவதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →