கோலாலம்பூர், செப்டம்பர்.21-
நீதிமன்ற வழக்குகளில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதீதப் பயன்பாடு பெரும் சவால்களை உருவாக்கும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தொழில்நுட்பத் தடயவியல் பிரிவின் இயக்குநர் வான் ஸுல்கிஃப்லி வான் ஜுசோ எச்சரித்துள்ளார். மனிதர்களின் செயலாக்கம் இல்லாமல் முழுமையாகச் செயற்கை நுண்ணறிவை நம்பியிருப்பது, ஆதாரங்களைத் தவறாகப் புரிந்து கொள்ள வழிவகுக்கும் என்றவர் குறிப்பிட்டார். தொழில்நுட்பம் வழக்கு விசாரணைகளுக்கு உதவினாலும், அதில் உள்ள நெறிமுறை, தொழில்நுட்பச் சிக்கல்கள், சட்டச் சிக்கல்கள் ஆகியன குறித்துக் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.








