Oct 14, 2026
Thisaigal NewsYouTube

நாளை நிறைவு பெறும் கும்பமேளா! வாகனங்களுக்குத் தடை விதித்து புதிய கட்டுப்பாடு

திசைகள் செய்திப்பிரிவு
Share:

பிரயாக்ராஜ், பிப்.25-

மகா கும்பமேளா நிகழ்வு நாளை நிறைவு பெறவிருக்கும் நிலையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. திரிவேணி சங்கமத்தில் ஜன.13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா நிகழ்வு, நாளை நிறைவு பெறுகிறது. இதுவரை 63 கோடிக்கும் அதிகமானோர் கும்பமேளாவில் கலந்து கொண்டு நீராடி இருக்கின்றனர்.

நாளையுடன் விழா நிறைவு பெற இருப்பதால் பிரயாக்ராஜ் வருவோர்களுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். எப்போதும் இல்லாத வகையில் நாளைய தினம் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கூட்டத்தை கட்டுப்படுத்த ஏதுவாக இன்று மாலை முதல் பிரயாக்ராஜ் முழுவதும் வாகனங்கள் செல்லத் தடை செய்யப்பட்டப் பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளான பால், காய்கறிகள், மருந்து பொருட்கள், எரிபொருள் உள்ளிட்ட அவசியங்களுக்கு மட்டும் போலீசார் அனுமதி அளித்து வருகின்றனர்.

அத்தியாவசிய தேவைகளுக்காக மருத்துவர்கள், காவலர்கள், நிர்வாக அதிகாரிகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரயாக்ராஜ் பகுதியில் எந்த இடத்தில் மக்கள் வருகின்றனரோ, அதன் அருகில் நீராட வேண்டும் என்று கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

கெடாவில் 8,190 லிட்டர் டீசல் பறிமுதல்! லாரியுடன் ரிங்கிட் 89,148 மதிப்பிலான பொருட்கள் சிக்கின

கெடாவில் 8,190 லிட்டர் டீசல் பறிமுதல்! லாரியுடன் ரிங்கிட் 89,148 மதிப்பிலான பொருட்கள் சிக்கின

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்

இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்