Apr 8, 2026
Thisaigal NewsYouTube
SPRM தலைவர் பேச்சிற்கு இடையூறு: மூன்று பேர் கைது
தற்போதைய செய்திகள்

SPRM தலைவர் பேச்சிற்கு இடையூறு: மூன்று பேர் கைது

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி உரையாற்றிக்கொண்டிருந்தபோது, அவருக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு மூன்று நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அசாம் பாக்கி உரையாற்றிக்கொண்டிருந்தபோது, இருவர் பதாகைகளை ஏந்தியபடி அவரை நோக்கிச் சென்று முழக்கமிட்டுத் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

அரசு ஊழியரின் கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல், தூண்டுதல், மிரட்டல் மற்றும் அத்துமீறி நுழைதல் ஆகிய பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாகக் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ ஃபடில் மார்சுஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த வழக்கு விரைவில் சட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Related News