Jul 29, 2026
Thisaigal NewsYouTube
இணைய மோசடியைத் தடுக்க புதிய சட்டம் உருவாக்கம்- அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்
தற்போதைய செய்திகள்

இணைய மோசடியைத் தடுக்க புதிய சட்டம் உருவாக்கம்- அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

Share:

தைப்பிங், ஜூலை 08-

இணையத் வலைத்தளங்களில் நிகழும் மோசடிகளைத் தடுப்பதற்காக புதிய சட்டத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு 2010 ஆம் ஆண்டு தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் பிரிவு 709 இல் செய்யப்படவிருக்கும் திருத்தம் எந்த பாதிப்பை ஏற்படுத்தாது என இலக்கவியல் அமைச்சு உறுதியளித்துள்ளது.

இவ்விரு சட்டங்களும் நுட்ப மற்றும் சட்ட அமலாக்க கோணங்களில் முற்றிலும் மாறுபட்டவை என்று இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

சட்டப் பிரிவு 709 இல் செய்யப்படவிருக்கும் திருத்தமானது, தனிநபர் தரவுகள் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தரவு மீறல் அல்லது ஊடுருவல் நிகழ்ந்தால் அது குறித்த முன்னறிவிப்பை சம்பந்தப்பட்ட பங்களிப்பாளர்கள் கட்டாயமாக வழங்குவதை உறுதி செய்வதற்கான சட்ட விதிகளை அரசாங்கம் உருவாக்க வேண்டியுள்ளது என்று கோபிந்த் சிங் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்