Jul 31, 2026
Thisaigal NewsYouTube
மடானி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு விழாவுக்கு பேருந்து சேவை
தற்போதைய செய்திகள்

மடானி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு விழாவுக்கு பேருந்து சேவை

Share:

கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் நாளை வரை நடை பெறும் மடானி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு விழாவுக்கு பேருந்து சேவை வழங்கப்பட உள்ளதாக அந்த நிகழ்ச்சியில் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

Endah Parade பேருந்து நிறுத்தம், புக்கிட் ஜலீல் பெவிலியன் பேருந்து நிறுத்தம், MRANTI Park இன் முதல் தளம், ஆஸ்ட்ரோ புக்கிட் ஜலீல் இன் பொது மகள் நுழைவாசல் ஆகிய நான்கு இடங்களில் இருந்து 30 நிமிடங்களுக்கு ஒரு முறை புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கிற்கு பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், Touch ‘n Go அல்லது டோக்கனைப் பயன்படுத்துவோருக்கு 25 விழுக்காடு கழிவும் வழங்கப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News