Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மாதுவின் கைப்பையை அறுத்துக்கொண்டு தப்பிய இருவரை போலீஸ் தேடுகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாதுவின் கைப்பையை அறுத்துக்கொண்டு தப்பிய இருவரை போலீஸ் தேடுகிறது

கிள்ளான், நவ. 21-


மோட்டார் சைக்கிளில் பயணித்த மாதுவை மடக்கி, அவரின் தோளில் மாட்டப்பட்டு இருந்த கைப்பையை அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிய இரண்டு வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்..

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 2.30 மணியளவில் கிள்ளான், ஜாலான் கங்கார் சாலையில் இரண்டே கால் மையிலில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மாது காயம் அடையவில்லை என்ற போதிலும், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பொருத்தப்பட்ட ரகசிய கேமராவில் பதிவான காட்சியைக்கொண்டு அந்த இரண்டு கொள்ளையர்களை போலீஸ் தேடி வருகிறது.

கொள்ளையர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்களின் பின்புறம் நம்பர் பட்டை எதுவும் காணப்படவில்லை என்று வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எஸ்.விஜயராவ் தெரிவித்தார்.

கொள்ளையர்களின் ஒருவன், அந்த மாதுவின் கைப்பையை அறுக்கும் காட்சி ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளதால் அதனை அடிப்படையாக கொண்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாக விஜயராவ் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மாதுவின் கைப்பையை அறுத்துக்கொண்டு தப்பிய இருவரை போலீஸ் தே... | Thisaigal News