வங்சா மாஜு பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் சஹிர் ஹாஸ்ஸான், மனித வள அமைச்சின் கீழ் செயல்படும் திறன் மேம்பாட்டு நிதியக கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சஹிர் ஹாஸ்ஸான் நியமனத்தை மனித வள அமைச்சர் வி. சிவகுமார் இன்று அறிவித்தார். அந்த நிதியகத்தின் துணைத்தலைவராக சிலாங்கூர், புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் ரிஷ்யாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். மலேசியாவில் உயர்திறன் நிறைந்த மனித மூலதனத்தை மேம்படுத்துவதில் அந்த நிதியகத்தின் புதிய நியமனங்கள் புத்தெழுச்சியை ஏற்படுத்தும் என்று அமைச்சர் சிவகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.








