Jan 19, 2026
Thisaigal NewsYouTube
பொது மக்களின் கண்ணீர் அஞ்சலிக்குப் பிறகு தகனம்
தற்போதைய செய்திகள்

பொது மக்களின் கண்ணீர் அஞ்சலிக்குப் பிறகு தகனம்

Share:

போட் டிக்சன் கடலில் மூழ்கி உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரிகளின் நல்லடக்கச் சடங்கு உறவினர்கள், பொது மக்கள் என சுமார் 2 ஆயிரம் பேரின் கண்ணீர் அஞ்சலியுடன் இன்று நடைபெற்றது.

30 வயது ஆர்.கலைவாணி, 29 வயது தேவிகா மற்றும் 19 வயது சத்தியத் தேவி ஆகிய மூன்று சகோதரிகளின் இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் 3 மணியளவில் பந்திங், தாமான் கெம்பிராவில் உள்ள அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

மூவரின் இறுதிச் சடங்கும் ஒரே நேரத்தில் நடைபெற்ற போது, துக்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுத காட்சி, இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களின் கண்களைக் குளமாக்கியது.

" ஆறு பிள்ளைகளில் மூன்று பிள்ளைகளை ஒரே நேரத்தில் பறிகொடுத்து விட்டோமே" என்று அச்சகோதரிகளின் 52 வயது தாயார், தேவி கதறி அழுத போது ஒரே நிசப்த சூழ்நிலை உருவாகியது.

இறுதிச் சடங்கிற்குப் பின்னர், அந்த மூன்று சகோதரிகளின் பிரேதப் பெட்டிகள், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று வெவ்வேறு சவ வண்டிகளில் ஏற்றப்பட்டு, பந்திங், சுங்கை சிடு இந்து மயானத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, தமது சகோதரன் மற்றும் உறவுக்காரருடன் போர்ட் டிக்சன், பந்தாய் சஹாயா கடலில் குளித்துக்கொண்டிருந்த போது, தீடீரென்று ஏற்பட்ட நீர் பெருக்கில் அந்த மூன்று சகோதரிகளும் சுமார் 50 மீட்டர் தூரம் நீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மூச்சுத்தினறி உயிரிழந்தனர்.

Related News