Mar 24, 2026
Thisaigal NewsYouTube
தனது வளர்ப்புப் பெற்றோரை கொன்ற நபருக்கு தூக்கு
தற்போதைய செய்திகள்

தனது வளர்ப்புப் பெற்றோரை கொன்ற நபருக்கு தூக்கு

Share:

செரம்பன், ஜூலை 4-

தனது வளர்ப்புத் தந்தையையும், தாயாரையும் சரமாரியாக வெட்டிக்கொன்ற குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு சிரம்பான் உயர் நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனை விதித்தது.

டான் கியான் ங்கிப் என்ற 45 வயதுடைய அந்த நபர், தூக்குத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று அறிவித்து இருப்பதால் அந்நபரை தூக்கிலிடும் நாள் மற்றும் இடம் ஆகியவற்றை நீதிமன்றம் பின்னர் முடிவு செய்யும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ ரோஹானி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

பங்கு விற்பனை இடைத் தரகரான டான் கியான் ங்கிப், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜுலை 24 ஆம் தேதி இரவு 7.45 மணியளவில் நெகிரி செம்பிலான்,நிலை, தாமன் டேசா மேலதி நிலை என்ற இடத்தில் தனது வளர்ப்பு தந்தையான 73 வயது Tan Kim Joo மற்றும் வளர்ப்புத் தாயாரான 67 வயது எங் சோங் ஹ்வா ஆகியோரை வெட்டிக்கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

இக்கொலை வழக்கில் பிராசிகியூஷன் தரப்பில் 40 சாட்சிகளும், எதிர்தரப்பில் நான்கு சாட்சிகளும் ஆஜராகியிருந்தனர்.

Related News