கோலாலம்பூர், செப்டம்பர்.08-
சாரா உதவித் தொகையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்கும் எந்த ஒரு தரப்பினருக்கும் அரசாங்கம் பரிவு காட்டாது என இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் எச்சரித்துள்ளார்.
சிறு வியாபாரிகள் சிலர் தங்களது பொருட்களின் விலையை உயர்த்தி விட்டதாக சமூக ஊடகங்களில் எழுந்துள்ள புகார்கள் குறித்து கருத்துரைத்த அவர் இவ்விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இப்புகார்கள் அனைத்தும் விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாப நோக்க எதிர்ப்புச் சட்டம் 2011-ன் கீழ் உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்றும் அமீர் ஹம்ஸா அஸிஸான் குறிப்பிட்டார்.
அதே வேளையில், பேரங்காடிகள் சில மக்களுக்கு உதவும் வகையில் சிறப்புச் சலுகைகள் வழங்கி வருவதையும் அவர் பாராட்டினார்.








