கோலாலம்பூர், நவம்பர்.10-
ரோமானியர்களுக்கு கப்பல் கட்டுமான நிபுணத்துவத்தைக் கற்று தந்தவர்கள் மலாய்க்காரரர்கள் என்று பல்கலைக்கழகம் ஒன்றின் விரிவுரையாளர் ஒருவர் வாதிட்ட விவகாரம், இந்த மக்களவையிலும் பரபரப்பாக பேசப்பட்டது.
மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்லைக்கழகத்தைச் சேர்ந்த பெண் விரிவுரையாளர் கூறிய அந்த விஷயம் மக்களிடையே மாறுபட்ட கருத்துகளுக்கு வித்திட்ட போதிலும், தகவல்கள் தவறாக முன்வைக்கப்படும் போது, அதனைக் கையாளும் பொறுப்பை ஒற்றுமைத்துறை அமைச்சு ஏற்க வேண்டும் என்று எம்.பி. ஒருவர் வலியுறுத்தினார்.
இது போன்ற சர்சைக்குரிய தகவல்கள், சமூக ஊடகங்களில் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகியிருப்பதாக பாரிசான் நேஷனலின் ஜெம்போல் எம்.பி. Shamshulkahar Deli தெரிவித்தார்.
வரலாற்றுத் தகவல்கள் சமூக ஊடகங்களில் நகைச்சுவைக்கு வித்திட்டு இருப்பதைக் காணும் போது மனதுக்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பக்காத்தான் ஹராப்பானின் புக்கிட் பெண்டேரா எம்.பி. Syerleena Abdul Rashid, இப்படியொரு தவறான தகவலை வெளியிட்ட பல்கலைக்கழக பேராசிரியர் Solehah Yaacob- பைக் கண்டித்தார்.
வரலாற்று உண்மைகள் மற்றும் தகவல்களை, கற்பனை வளத்தைக் கொண்டு கட்டுக்கதைகளாகக் கூறக்கூடாது என்று வலியுறுத்தினார்.
சீனர்களுக்கு Kung Fu சண்டையை கற்றுக் கொடுத்தவர்களே மலாய்க்காரர்களே என்று இதே பேராசிரியர் முன்பு கூறிய போது, அவரை வரலாற்றுப் பேராசிரியர்கள் கண்டித்ததை Syerleena Abdul Rashid நினைவு கூர்ந்தார்.
வரலாறுகள் என்பது உண்மையான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டுமே தவிர மனம் போன போக்கில் கட்டுக்கதைகளாக இருக்கக்கூடாது என்று Syerleena Abdul Rashid வலியுறுத்தினார்.








