Oct 7, 2026
Thisaigal NewsYouTube

மக்கள் ஓசை மூத்த ஆசிரியர் பி.ஆர். ராஜனுக்கு தாபுங் காசே@ஹாவானா மூலம் உதவி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மக்கள் ஓசை மூத்த ஆசிரியர் பி.ஆர். ராஜனுக்கு தாபுங் காசே@ஹாவானா மூலம் உதவி

சிகிச்சைப் பெற்று வரும் மக்கள் ஓசை நாளிதழின் மூத்த ஆசிரியர் பி.ஆர். ராஜனை செலாயாங் மருத்துவமனையில் இன்று சந்தித்த தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நோ சிங், அவருக்கு தாபுங் காசே@ஹாவானா X TM மூலம் உதவித் தொகையை வழங்கினார். உதவித் தொகையை அவரது மனைவி அ. சரஸ்வதி பெற்றுக் கொண்டார்.

68 வயதான பி.ஆர். ராஜன், 45 ஆண்டுகளாக உள்ளூர் ஊடகத் துறையில் பணியாற்றி வருவதுடன், 15 ஆண்டுகளாக மக்கள் ஓசை நாளிதழில் சேவையாற்றி வருவதாக தியோ தெரிவித்தார். உயர் இரத்த அழுத்தப் பிரச்னையால் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி கழிப்பறையில் தவறி விழுந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தற்போது பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனிடையே, தாபுங் காசே@ஹாவானா மூலம் இதுவரை 253 ஊடகவியலாளர்கள் பயனடைந்துள்ளதுடன், 770,300 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தியோ தெரிவித்தார். அவர்களில் இந்த ஆண்டு தமிழ் ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த 42 ஊடகவியலாளர்களும் அடங்குவர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →