Oct 8, 2026
Thisaigal NewsYouTube

புகைமூட்டம்: ஏபிஐ 180-ஐ தாண்டிய பகுதிகளில் நாளை முதல் பள்ளிகள் மூடல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புகைமூட்டம்: ஏபிஐ 180-ஐ தாண்டிய  பகுதிகளில் நாளை முதல் பள்ளிகள் மூடல்

புகைமூட்டம் காரணமாக காற்றுத் தூய்மைக் குறியீடு ஏபிஐ 180-ஐ தாண்டிய பகுதிகளில் உள்ள கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பள்ளிகளும், கல்விக் கழகங்களும் நாளை வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட வேண்டும் என்று கல்வித் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முஹமட் அஸாம் அஹ்மாட் அறிவித்துள்ளார்.

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏபிஐ அளவு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 150-ஐ கடந்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகளும், கல்விக்கழங்களும் வரும் திங்கட்கிழமை முதல் மூடப்படும் என்றும் அவர் கூறினார்.

மூடப்படும் காலத்தில் வீட்டிலிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்றும், மாணவர்களின் வசதி, அணுகல் மற்றும் ஆசிரியர்களின் தயார்நிலைக்கு ஏற்ப கற்பித்தல் முறைகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் டத்தோ அஸாம் தெரிவித்தார்.

ஆசிரியர்கள் மற்றும் துணைப் பணியாளரக்ள் பள்ளிகள் மூடப்படும் காலத்தில் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவர். ஏபிஐ நிலவரத்தை மாநில மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்கள் தொடர்ந்து கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →