சுங்கை பட்டாணி, செப்டம்பர்.06-
சுங்கை பட்டாணி, பண்டார் பெர்டானாவில் உள்ள ஓர் எண்ணெய் நிலையத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காருக்குள் ஆடவர் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவின் பதிவின்படி அந்தக் கார், கடந்த புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் அவ்விடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது என்று கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அந்தக் காரிலிருந்து துர்நாற்றம் வீசுவதைக் கண்ட பொதுமக்கள், காரின் அருகில் சென்று பார்த்த போது ஆடவர் ஒருவர் அசைவின்றி கிடப்பதை கண்டு பின்னர் போலீசுக்குத் தகவல் கொடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
51 வயது மதிக்க அந்த நபரின் மரணத்தில் குற்றத்தன்மைக்கான எந்தவொரு தடயமும் இல்லை. அவர் கெடா, பெடாங், புக்கிட் சோரோஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் கூறப்பட்டதாக ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.








