கிள்ளான் கம்போங் ஜாவா அருகில் உள்ள பழைய பொருட்கள் சேகரிப்பு தொழிற்சாலை ஒன்றில் கட்டாயப்படுத்தி வேலைக்கு அமர்த்திய 5 அந்நிய நாட்டு இளையவர்கள் புக்கிட் அமான் குற்றவியல் புலன் விசாரணை பிரிவினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
நான்கு மணி நேரமாக அந்த தொழிற்சாலையில் போடப்பட்ட சோதனைக்கு பின்பு 14 வயது முதல் 17 வயதுகுறைந்த இளையவர்களை கட்டாயமாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என புக்கிட் அமான் குற்றவியல் புலன் விசாரணை பிரிவின் தலைமை துணை இயக்குனர் மூத்த துணை கமிஸ்னர் ஃபட்லி மர்சூஸ் தெரிவித்தார்.
கடந்த ஆறு மாதங்களாக அந்த 5 இளையவர்கள் நாளுக்கு 50 வெள்ளி சம்பளம் பெற்று அந்த பழையப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள சேகரிப்பு தொழிற்சாலையில் வேலைக்கு அமர்த்தப்ப்ட்டிருந்தார்கள் என கூறியதுடன் இது ஆள் கடத்தல் குற்றத்தின் கீழ் மற்றும் வயது குறைந்த குழந்தை தொழிலாளிகள் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும் என அந்த மூத்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.








