Nov 2, 2025
Thisaigal NewsYouTube
"இன்ஃபுளுவென்ஸா அறிகுறிகளுக்கு சுய பரிசோதனை கூடாது, மருத்துவ உதவியை நாடுங்கள்" - சுகாதார அமைச்சு
தற்போதைய செய்திகள்

"இன்ஃபுளுவென்ஸா அறிகுறிகளுக்கு சுய பரிசோதனை கூடாது, மருத்துவ உதவியை நாடுங்கள்" - சுகாதார அமைச்சு

Share:

கோலாலம்பூர், நவம்பர்.01-

இன்ஃபுளுவென்ஸா நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையிலோ அல்லது சுகாதார மையத்திலோ சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படி சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

மாறாக சுய பரிசோதனைக் கருவிகளைப் பயன்படுத்த அரசாங்கம் எந்த ஒரு அனுமதியும் வழங்கவில்லை என்றும் அறிவுறுத்தியுள்ளது.

அதே வேளையில், சில இணையதளங்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் இன்ஃபுளுவென்ஸா சுய பரிசோதனைக் கருவிகளை, மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள் வாங்க வேண்டாம் என்றும் மருத்துவச் சாதன ஆணையமான எம்டிஎ எச்சரித்துள்ளது.

சுகாதாரத்துறையின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை தரநிலைகளுக்கு ஏற்ப உற்பத்தி செய்யும் உரிமம் பெற்ற நிறுவனங்களிடமிருந்து மட்டுமே அது போன்ற சாதனங்களை வாங்க வேண்டும் என்றும் எம்டிஎ வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, இன்ஃபுள்ய்வென்ஸா பரிசோதனைக் கருவிகள் சட்டவிரோதமாக இணையத்தில் விற்பனை செய்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்துக் கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அஹ்மாட், இவ்விவகாரத்தை ஆராய்ந்து அமைச்சில் விவாதிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Related News