Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வாடிக்கையாளர்களை முட்டாள் என்றழைத்த ஸ்டார்பக்ஸ் பணியாளர் பணிநீக்கம்!
தற்போதைய செய்திகள்

வாடிக்கையாளர்களை முட்டாள் என்றழைத்த ஸ்டார்பக்ஸ் பணியாளர் பணிநீக்கம்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.23-

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் 2 -ல் இரு வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் 'போடோ' என்ற வார்த்தையை உச்சரித்த ஸ்டார்பக்ஸ் பாரிஸ்தா ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்ட அக்காணொளியில், அப்பெண் பணியாளர், சுற்றுலாப் பயணிகளுக்கு உணவுகளை எடுத்து வழங்கும் பரபரப்பில், விரக்தியடைந்து அவ்வார்த்தையை உச்சரித்ததாக நம்பப்படுகின்றது.

வெளிநாட்டவர்களை முட்டாள் என்றழைத்ததற்காக அப்பெண்ணுக்கு எதிராக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளதையடுத்து இவ்விவகாரம் ஸ்டார்பக்ஸ் நிர்வாகத்திற்கு எட்டியது.

இந்நிலையில், அப்பெண் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை ஸ்டார்பக்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

Related News