புக்கிட் மெர்தாஜாம், மார்ச்.08-
மத போதகர் ஸம்ரி வினோத் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 20 வயது தொழிற்சாலை ஊழியரை, விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க புக்கிட் மெர்தாஜாம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று ஆஸ்டன் அகாசியா பூங்கா அருகே ஜம்ரி வினோத்தின் கார் மறிக்கப்பட்டு, கற்களால் தாக்கப்பட்டதில் காரின் கண்ணாடி உடைந்த சம்பவம் தொடர்பாகப் பினாங்கு காவற்படை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மிரட்டல் விடுத்தல், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் காவற்படையினர் தேடி வருகின்றதாக பினாங்கு மாநிலக் காவற்படைத் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.








