Aug 13, 2026
Thisaigal NewsYouTube
திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: கோபிந்த் சிங் தியோ இன்று அவசரக் கூட்டம்
தற்போதைய செய்திகள்

திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: கோபிந்த் சிங் தியோ இன்று அவசரக் கூட்டம்

Share:

கடும் மழை காரணமாக கடந்த சனிக்கிழமை கிள்ளான் பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெட்டாலிங் ஜெயா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பாக உடனடி நடவடிக்கை திட்டத்தை வகுக்க சம்பந்தப்பட்ட அரசாங்க சார்பு நிறுவனங்கள் மற்றும் மேம்பாட்டாளர்களுடன் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் தியோ இன்று ஒரு அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

சுற்றுச்சூழல் துறை, நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, பெட்டாலிங் ஜெயா மாநகர்மன்றம், மேம்பாட்டாளர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப முகாமைகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளன.

வெள்ளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மற்றும் நீண்ட காலத் தீர்வுகளுக்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஜசேகா தலைவருமான கோபிந்த் சிங் தெரிவித்தார். சாலைகள், ஆற்றங்கரைகள் மற்றும் அருகிலுள்ள வீடுகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ள அவர், எந்தவொரு பழுதுபார்ப்பு அல்லது தணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பாக பொதுமக்களின் பாதுகாப்பே முதலிடமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related News

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி