கோலாலம்பூர், ஆகஸ்ட்.22-
முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லியின் 12 வயது மகன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் 19 பேரிடம் விசாரணை செய்யப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
விசாரணைத் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். ரஃபிஸியின் மகன், புத்ராஜெயாவில் உள்ள பேரங்காடி மையத்தின் கார் நிறுத்தும் இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரு நபர்கள் தீவிரமாகத் தேடப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.








