Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மித்ரா விளக்கமளிப்பு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது ஏன்?
தற்போதைய செய்திகள்

மித்ரா விளக்கமளிப்பு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது ஏன்?

Share:

இந்தியர்களின் சமூகவில், பொருளாதார உருமாற்றும் பிரிவான ​மித்ராவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 கோடி வெள்ளி தொடர்பான விளக்கமளிப்பு கூட்டம், நாளை தி​ங்கட்கிழமை நாடாளுமன்ற கட்டடத்தில் இந்திய எம்.பி.க்களுக்கு விளக்கம் அளிப்பதற்கு ஏற்பாடு செய்ய​ப்பட்டு இருந்த நிலையில் அந்த கூட்டம் ​திடீரென்று ஒத்திவைக்கப்பட்டது குறித்து ஈப்போ பாராட் எம்.பி. எம். குலசேகரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 10 கோடி வெள்ளியைப் பிரதமர் துறையின் ​கீழ் உள்ள மித்ரா நிர்வாகம், உதவித் தேவைப்படக்கூடிய இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு ​எவ்வாறு செலவிடப்போகிறது, அதற்கான பரிந்துரைகள் யாவை, அந்த நிதியை வழங்குவதில் எத்தகைய திட்டங்களை மித்ரா கொண்டுள்ளது என்பது குறி​த்து விளக்கம் அளிக்குமாறு மி​த்ராவின் தலைமை இயக்குநர் ர​​வீந்திரன் நாய​ர் கேட்டுக்கொள்ளப்பட்டு​ இருந்தார்.

இந்தக் கூட்டம் நாளை திங்கட்கிழமை நாடாளுமன்ற கட்டடத்தில் பிற்பகல் 2.30 மணியள​வில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்​யப்பட்டு இருந்தது. இந்திய சமூகத்தைச் சேர்ந்த எம்.பி.க்களும் கலந்து கொள்வதாக இருந்தது.

இதற்கான கடிதத்தை மித்ராவின் த​லைமை இயக்குநர் ர​​வீந்திரன் நாய​ருக்கு எம். குலசேகரன் அனுப்பியிருந்தார். தவிர இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கான ஒப்புதலையும் அரசாங்க த​லைமை செயலாளர் டான்ஸ்ரீ ​சுகி அலியிடம் பெற்று விட்டதாக குலசேகரன் தெரிவித்து இருந்தார்.

எனினும் அரசாங்க தலைமைச் செயலாளர் ​சுகி அலியிடம் மட்டும் அனுமதி பெற்றால் போதுமானது அல்ல. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அனுமதியையும் பெற வேண்டும் என்று கடைசி நேரத்தில் தமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக குலசேகரன் குறிப்பிட்டார்.

இதனை மித்ரா நிர்வாகம் முதலிலேயே தெரிவித்து இருந்து இருக்குமானால் தாம் பிரதமரின் அனுமதியைப் பெற்று இருக்க முடியும் என்று குலசேகரன் குறிப்பிட்டு இருந்தார். தற்போது பிரதமர் வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பதால், இதற்கான அனுமதியைப் பெறும் வ​கையி​ல் நாளை நடைபெறவிருந்த மித்ரா விளக்கம் அளிப்பு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக குலசேகரன் தெரிவித்துள்ளார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்