Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கார் மரத்தில் மோதியது, பெண் மரணம்
தற்போதைய செய்திகள்

கார் மரத்தில் மோதியது, பெண் மரணம்

Share:

ஜார்ஜ்டவுன், ஏப்ரல் 20-

கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, மரத்தில் மோதியதில் அதில் பயணித்த பெண் உயிரிழந்த வேளையில் மேலும் இருவர் பலத்த காயங்களக்கு ஆளாகினர்.

இவ்விபத்து இன்று சனிக்கிழமை அதிகாலை 4.20 மணியளவில் பினாங்கு, ஜார்ஜ்டவுன், ஜாலான் மக்கலிஸ்டர் சாலையில் நிகழ்ந்தது.

அந்த வோக்ஸ்வேகன் காரை செலுத்திய 24 வயது ஃபூ யூ சுவா என்ற பெண்மணி பலத்த காயங்களக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார்.

காரின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கி, வெளியேற முடியாமல் பரிதவித்த மேலும் இரு ஆடவர்களை, தீயணைப்பு,மீட்புப்படையினர் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தி, அந்த இருவரையும் மீட்டனர் என்று பினாங்கு தீயணைப்பு, மீட்புப்படை இலாகாவின் செயலாக்க அதிகாரி ஷாரி மன்சர் தெரிவித்தார்.

காயமுற்ற இருவர் தற்போது பினாங்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்