Jan 19, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.பி.ஆர்.எம். விசாரணை வளையத்திற்குள் அமைச்சர் சிவகுமார்
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.ஆர்.எம். விசாரணை வளையத்திற்குள் அமைச்சர் சிவகுமார்

Share:

தமது இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள வேளையில் மனித வள அமைச்சர் வி.சிவகுமாரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்கு அழைத்துள்ளது. லஞ்ச ஊழல் தொடர்பில் தமது அரசியல் பெண் அந்தரங்க செயலாளரும், சிறப்பு அதிகாரியும் கைது செய்யப்பட்டது தொடர்பில், 52 வயதான சிவகுமார் வாக்குமூலம் அளிப்பதற்கு எஸ்.பி.ஆர்.எம். மினால் அழைக்கப்பட்டுள்ளார்.

சிவகுமார் ஒரு சாட்சியாக அழைக்கப்பட்டுள்ளரா? அல்லது சந்தேகத்தின் பேரில் அழைக்கப்பட்டுள்ளாரா? என்பது உறுதி தெரியவில்​லை. ஆனால், குறிப்பிட்ட விஷயத்திற்காக சிவகுமார், எஸ்.பி.ஆர்.எம். மினால் அழைக்கப்பட்டுள்ளார் என்று அவரின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.ஆர்.எம். தம்மை இன்னும் அழைக்கவில்லை என்று அமைச்சர் சிவகுமார் நேற்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

Related News

எஸ்.பி.ஆர்.எம். விசாரணை வளையத்திற்குள் அமைச்சர் சிவகுமார் | Thisaigal News