கோலாலம்பூர், அக்டோபர்.04-
தங்களின் வர்த்தக வளாகங்களில் புடி95 சலுகை விலையில் பெட்ரோல் விற்பனைத் திட்டத்தில், எண்ணெய் கொள்முதல் செய்யும் போது, பிடி95 கட்டமைப்பு முறையில் இடையூறுகள் ஏற்படுமானால், பெறுநரின் விவரங்களையும் ரசீதையும் பாதுகாக்க கைவிரலியக்க மேனுவல் முறையையும் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணெய் நிலையங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் இது போன்ற இடையூறுகள் ஏற்படும் பட்சத்தில் பயனீட்டாளர்கள் எவ்விதச் சிரமத்தையோ அல்லது அசெகரியத்தையோ எதிர்நோக்காமல் இருப்பதற்கு மாற்று வழிமுறையையும் எண்ணெய் நிலையங்கள் கொண்டிருக்க வேண்டும் என்று உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவினத் துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஃபுஸியா சாலே கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 12.15 மணியளவில் பகாங், ஜாலான் கம்பாங்கில் உள்ள பிஎச் பெட்ரோல் நிலையத்தில் புடி95 கட்டமைப்பு முறையில் இடையூறு ஏற்பட்டதை துணை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.








