குவாந்தான், டிசம்பர்.21-
பகாங் மாநிலத்தின் வெள்ள நிலைமை படிப்படியாகக் குறைந்து வருவதால், நிவாரண மையங்களில் தங்கியுள்ள மக்களின் எண்ணிக்கை இன்று நண்பகல் நிலவரப்படி 3,884 ஆகக் குறைந்துள்ளது. தற்போது ஏழு மாவட்டங்களில் உள்ள 32 நிவாரண மையங்கள் மட்டுமே இயங்கி வரும் நிலையில், குவாந்தான் மாவட்டம் 3,152 பாதிப்பாளர்களுடன் இப்போதும் முதலிடத்தில் உள்ளது.
நிலைமை சீரடைந்து வந்தாலும், பெக்கான், பெரா மாவட்டங்களில் பாயும் பகாங் ஆற்றின் நான்கு கிளைகள் இன்னும் அபாயக் கட்டத்தைத் தாண்டியே ஓடிக் கொண்டிருக்கின்றன. ஒன்பது ஆறுகள் எச்சரிக்கை மட்டத்தில் இருப்பதால், பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என நீரியல் தந்திமுறை அமைப்பான Telemetri அறிவுறுத்தியுள்ளது.








